×

பொம்மை பொம்மை பொம்மை பார்...

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது வண்ணமயமான கொலு பொம்மைகள். கொலு என்றால் அழகு என்று பொருள். நவராத்திரியின் ஒன்பது நாட்கள் அழகான பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதில் சாமி பொம்மைகள் மட்டும் இல்லாமல் மிருகங்கள், செட்டியார் பொம்மைகள், கல்யாண செட் பொம்மைகள் என பல வகையான பொம்மைகள் இருக்கும்.

5000 வருடங்களுக்கு முன்பே மொகஞ்சதாரோ மற்றும் ஐரோப்பா பகுதியில் ஆய்வின்போது ஏராளமான பொம்மைகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் எந்த ஊரில் என்ன பொம்மைகள் சிறப்புன்னு தெரிந்து கொள்ளலாம்....

* பஞ்சாபில் ‘மணப்பெண் போன்ற பொம்மைகள் மிகப் பிரபலம். இதே போல் பாங்கரா டான்ஸ் ஆடுவது போன்ற பொம்மைகளும் அங்கு ஃபேமஸ். பொம்மைகள் செய்வதில் சண்டிகர் மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

* பொதுவாக எட்டி கொபக்கா (ஆந்திரா), கொண்டபல்லி, (ஆந்திரா), கின்னஸ் (கர்நாடகா), சன்னபட்டின் (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களிலிருந்து மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகின்றன.

* தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலைநுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும்.

இந்திய அரசால் 2008-2009 ஆம் ஆண்டு தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.

* மரப்பாச்சி பொம்மைகள், சன்னபட்டின் பொம்மைகள் என பொம்மைகளின் பாரம்பரியம் தொன்மையானது. இவை யானை மரம் (அ) தந்தமரம், நூக்கமரம் மற்றும் சந்தன மரத்தால் செய்யப்படுபவை.

* கேரள மாநில பொம்மைகள் என்றால் நினைவுக்கு வருவது கதகளி மற்றும் அலங்கரிக்கப்பட்ட யானை பொம்மைகள்.

* வடஇந்தியாவில் குழந்தையுடன் கூடிய தாய்-பொம்மை ரொம்ப பிரபலம். வாரணாசி, லக்னோ, மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களில் மரத்தால் செய்த அழகான பொம்மைகள் அம்சமாக இருக்கும்.

* ராஜஸ்தானில் சுட வைக்காத மண்ணில் பொம்மைகள் செய்து ‘மதுபாணி பொம்மைகள்’ என விற்பர்.
புல்லிலேயே செய்த பொம்மைகளும் இங்கு பிரபலமாக உள்ளது.

* ஆந்திரா, கொண்டபள்ளியில் பசும் சாணம், மரத்தூள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

* பேப்பர் மாஷ் பொம்மைகள் சீனாவில்தான் முதன்முதலில் செய்யப்பட்டன.

* கொகஷி என்பவை ஜப்பானிய பொம்மைகள். இவை மரத்தைக்கொண்டு கைகளால் செய்யப்படுபவை. பெரிய உருண்டை தலை, கை, கால் இல்லாத உருளை உடல். அதில் வண்ணக்கோடுகள் தீட்டப்பட்டு இருக்கும். கொகஷி பொம்மைகள் வீட்டில் வைத்திருந்தால் தீ விபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை அங்கு உள்ளது.

* கச்சினா, அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகளாகும். வட அமெரிக்கர்கள் தங்களின் மூதாதையர்களை அவர்கள் குழந்தைகளுக்கு கச்சினா பொம்மைகள் மூலம் அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Tags : Toy, History
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...